17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதி மாணவர்களுக்கு வில் மெடல்ஸின் உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதி மாணவர்களுக்கு வில் மெடல்ஸின் உயர்வோம் உயரச் செய்வோம் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan July 21, 2019, 8:07 pm

இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில்  உள்ள சோமசுந்தரி டியூசன் சென்டரில் மாணவ மாணவியரின் தனித்திறனை ஊக்குவிக்கும் விதமாக வில் மெடல்ஸ் நிறுவனத்தின் உயர்வோம் உயரச்செய்வோம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியர்  சாந்தகுமார் வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 39

மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .இந்நிகழ்ச்சியில் கவிதை ,கட்டுரை , மற்றும் ஓவிய திறன்களை மாணவக்கண்மணிகள் ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வில் மெடல்ஸ் நிறுவனத்தின் சிக்கல் பகுதி ஒருங்கிணைப்பாளர் மாணவர் ஷேக் முகமது ரஷீது செய்திருந்தார். அனைத்து மாணவர்களும் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுச்சான்றிதழ் பெற்று மகிழ்வுடன் காணப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!