17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » கோவையில் ஜெயலலிதாவுக்கு கோயில்.

கோவையில் ஜெயலலிதாவுக்கு கோயில்.

எழுதியவர்: mohan July 21, 2019, 9:58 am

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவையில் 5 லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் அமைத்து தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.கோவை மாநகராட்சி 100வது வார்டுக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில், அ.தி.மு.க-வின் முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தலைமையிலான தொண்டர்கள் ‘அருள்மிகு ஈசப்பன், கால பைரவர் ஆஞ்சநேயர் திருக்கோயில்’ என்ற பெயரில் ஒரு கோயிலை அமைத்துள்ளனர்.

அந்தக் கோயிலில், சுமார் 8 டன் எடைகொண்ட ஒரே கல்லின் ருபுறம் கால பைரவர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளின் உருவங்களும், மறுபுறம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ மும்   செதுக்கப்பட்டுள்ளது.தினசரி காலை மற்றும் மாலை நேர ங்க ளில், அதிமுக தொண்டர்கள் இங்கு வந்து ஜெயலலிதா மற்றும் சுவாமிகளின் உருவச்சிலைக்கு கற்பூரம் காட்டி வழிபாடு நடத்து கின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “இந்தப்பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள் நிதி திரட்டி, 5 லட்சம் ரூபாய் செலவில் இந்தக் கோயிலை அமைத்துள்ளோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்தக் கோயிலை திறந்து வைத்தார்” என தெரிவித்தனர். – சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!