18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan July 20, 2019, 6:21 pm

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் படுகொலையை கண்டித்து எஸ்டிபிஐ., கட்சி சார்பில் ராமநாதபுரம் சந்தை திடல் முன் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் எம்.ஐ. நூர் ஜியாவுதீன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப், துணைத் தலைவர் சோமு முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் பி.ஏ.அப்பாஸ் வரவேற்றார். கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.செய்யது இபுராஹிம் கண்டன உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது கண்டன உரையாற்றினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் நகர் செயலாளர் ஏ.சகுபர் சாதிக் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!