18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே மளிகைக் கடைக்காரர் மனைவி சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் முற்றுகை

நிலக்கோட்டை அருகே மளிகைக் கடைக்காரர் மனைவி சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் முற்றுகை

எழுதியவர்: mohan July 20, 2019, 6:12 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காம லாபுரத்தைச் சேர்ந்த ஜான் ஜோசப் வயது 45. பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் மனைவி கிரேசி மேரி          இருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் டோனி  13, லிவின்  10. ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன் தினம் கிரேசி மேரி காமலாபுரம் பிரிவில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதன்பின்னர் கிரேசி மேரி மயங்கி கிடப்பதாக ஜான் ஜோசப்புக்கு தகவல் கிடைத்தது.     இதனைத் தொடர்ந்து உடனடியாக கமலாபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு  வந்து  சேர்த்தபோது டாக்டர்கள் பரிசோதனை செய்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று சுமார்  12 மணி அளவில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு திரண்ட கிரேசி மேரியின் உறவினர்கள் பல இடங்களில் காயம் இருப்பதால் சாவில் மர்மம் இருப்பதாகவும், உடனடியாக இதை கொலை வழக்காக பதிவு செய்து உரிய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கூறி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.     அப்போது அங்கு வந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி உரிய பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை பெறப்பட்ட பின்பு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறவினர்கள் மத்தியில் வாக்குறுதி அளித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!