17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நவாஸ் கனி எம்பி., திடீர் ஆய்வு

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நவாஸ் கனி எம்பி., திடீர் ஆய்வு

எழுதியவர்: mohan July 20, 2019, 1:40 pm

இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு ஜூலை 18 இரவு நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தியதில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதால் மேலும் அவதி அடைந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துரித ஆய்வு செய்து, நோய் எதிர்ப்பு மருந்து தொடர்பாக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மருந்து, மாத்திரைகள் இருப்பு விவரம் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பி.கே.ஜவகர்லால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம் எஸ் ஏ ஷாஜகான் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!