18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » பாலக்கோடு பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த கண்காட்சி

பாலக்கோடு பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த கண்காட்சி

எழுதியவர்: mohan July 20, 2019, 9:23 am

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி வளாகத்தில் மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடைப்பெற்றது.தர்மபுரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழையால் கிடைக்கும் நீரை சிறிதும் வீணாக்காமல் முழுமையாக பயன்படுத்த மாவட்ட நீர்வாகம் முழு மூச்சில் பல்வேறு வழிகளில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன்

மூலம் கிராம மக்களுக்கு மழைநீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள வளாகத்தில் குடிசை வீடு ஓட்டு வீடு மாடி வீடு போன்ற மாதிரிகள் அமைக்கப்பட்டு அதில் விழும் மழை நீரை எவ்வவாறு சேமிப்பது என்பது குறித்து பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் விளக்கம் அளித்தார் இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மாணவிகள் கண்காட்சியை கண்டு தாங்களும் தங்களுடைய கிராமங்களில் இதுபோன்று செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக உறுதி மேற்கொண்டனர் பள்ளி மாணவிகள் அனைவருக்கும் பாலக்கோடு பாரத ஸ்டேட் பாங்க் சார்பாக பேரூராட்சி மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஜீஜிபாய் தலைமை வகித்தார்.பாலக்கோடு தசில்தார் வெங்கடேஷ்வரன் பாலக்கோடு ஸ்டேட் பாங்க் மேனேஜர் சதீஸ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் மேலும் சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!