தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ்நிலையம் சுற்றியுள்ள வீதிகளில் சட்ட வீரோதமான மூன்று எண் கொண்ட கேரளா விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. காலை முதலே கூலி வேலைக்கு செல்லுபவர்கள், இளைஞர்கள் மற்றும் கடை வியபாரிகள் என அனைவரும் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை வாங்குவதால் பல குடும்பங்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். தினதோரும் தள்ளுவண்டி விவபாரிகள் முதல் கூலி வேலை செய்பவர்கள் வரை லட்டரியை வாங்கி பணம் விழும் என்ற எதிர்பார்போடு வேலைக்குகூட செல்லாமல் காத்து கிடக்கின்றனர்.
இதில் சட்ட விரோதமாக தினதோரும் பலலட்சம் ரூபாய்க்கு லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். பாலக்கோடு பகுதியில் லாட்டரி விற்பனை குறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறைனர் நடவடிக்கை எடுக்கமால் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சட்ட வீரோதமாக விற்பனை செய்யும் கேரளா லட்டரிகளை தடை செய்ய வேண்டும் என்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கோட்டில் மூன்று எண் கொண்ட கேரளா லாட்டரி விற்னை
எழுதியவர்: mohan July 20, 2019, 9:18 am




You must be logged in to post a comment.