18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நடுக்கடலில் படகு மூழ்கி தண்ணீரில் தத்தளித்த மீனவர் கள் மீட்பு

நடுக்கடலில் படகு மூழ்கி தண்ணீரில் தத்தளித்த மீனவர் கள் மீட்பு

எழுதியவர்: mohan July 19, 2019, 5:26 pm

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் பகுதியைச் சேர்ந்தவர் இன்னாசி முத்து. இவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் பாக்கியம், காட்வின், ஜெர்சன், டென்னிஸ்டன், பரக்கத் , ஐய்டன், பகுருதீன் உள்பட எட்டு பேர், நேற்று முன் தினம் (17.7.19) கடலுக்குச் சென்றனர். மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய போது நடுக்கடலில் சூறைகாற்று வீசியது. இதனால் தனுஷ்கோடி ஏழாம் மணல் திட்டு அருகே தண்ணீரில் படகு மூழ்கியதால் 8 மீனவரும் கடலில் தத்தளித்தனர். அந்த வழியாக ரோந்து பணி மேற்கொண்டிருந்த இலங்கை

கடற்படையினர் மீனவர்களை, படகுடன் மீட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்தாக வழக்கு பதிந்தனர். மீனவர்களை மீட்க சென்ற, மண்டபம் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹோவர்கிராப்ட், மீனவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை கடற்படையினரிடம் கோரினர். இது குளித்து இந்திய அரசு சார்பில், கொழும்பு கடற்படை தலைமை அலுவலகத்திற்கு கடிதம் விரைவாக அனுப்பபட்டதையடுத்து இலங்கை கடற்படையினர் மீட்ட பாம்பன் மீனவர்கள் இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர் 8 பேரும் மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு மீனவர்களை மீட்ட இந்திய கடலோரக் காவல் படை வீரர்களை க மாண்டிங் அதிகாரி வெங்கடேஷன் பாராட்டினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!