17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » CCTV கேமிரா பதிவுகள் மூலம் வாகன விபத்து ஏற்படுத்தியவர் கண்டுபிடிப்பு

CCTV கேமிரா பதிவுகள் மூலம் வாகன விபத்து ஏற்படுத்தியவர் கண்டுபிடிப்பு

எழுதியவர்: mohan July 19, 2019, 9:54 am

கடந்த 14.07.2019 ம் தேதி வாடிப்பட்டி நீரேத்தானை சேர்ந்த ராக்கையா மகன் பாண்டித்துரை தனது இரு சக்கர வாகனத்தில் அவரது அப்பாவுடன் மதுரை மாநகர் சிவகங்கை மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தாா்.அப்போது எதிரே வந்த காா் இவா்கள் மீது மோதியதில் ராக்கையா சம்பவ இடத்திலேயே பலியானாா்.பாண்டித்துரை காயங்களுடன் உயிா்தப்பினாா்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் போலிசாா் காவல் நிலைய ஆய்வாளர்  பெத்துராஜ் தலைமையில் வாகன விபத்தை ஏற்படுத்திய நபரை தேடியதில் மதுரை சிவகங்கை ரோடு சோதனைச்சாவடியில் உள்ள CCTV கேமிரா பதிவுகள் மற்றும் மேலூர் ரோடு சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் உள்ள CCTV கேமிரா பதிவுகளை பார்வையிட்டதில் விபத்தை ஏற்படுத்தியது காரைக்குடி முத்துமாணிக்கம், என தெரியவந்தது .போலிசாா் அவரை கைது செய்தனா்.CCTV கேமிராக்கள் மூலமே மேற்படி குற்றவாளியை கண்டுபிடிக்க முடிந்தது. காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம்  தனிப்படையினரை பாராட்டினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!