18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » வண்டலூரில் வரும் 31ம் தேதி பேச்சுக்கலை பயிலரங்கம்..!

வண்டலூரில் வரும் 31ம் தேதி பேச்சுக்கலை பயிலரங்கம்..!

எழுதியவர்: ஆசிரியர் July 18, 2019, 11:37 pm

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் வரும் 31ம் தேதி, தமிழ்ப் பேரவை மற்றும் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரஸண்ட் பல்கலைக்கழகம் அரபி மற்றும் இஸ்லாமிய இயல் கல்வியகம் சார்பில் பேச்சுக்கலை பயிலரங்கம் நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழக கலையரங்கத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள இந்த பயிலரங்கத்தில் நாஞ்சில் சம்பத், வே.மதிமாறன், முனைவர்கள் பர்வீன் சுல்தானா, சுந்தரவள்ளி ஆகியோர் கலந்துகொண்டு, உரையும் உரையாடலும் நிகழ்த்துகின்றனர்.

பேச்சுக் கலையில் ஆர்வம் உள்ளவர்களும், இந்த பயிலரங்கத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்களும், வரும் 28ம் தேதிக்குள் 9962996627 என்ற எண்ணில் தங்கள் பெயரை பதிவுசெய்து கொள்ளவும்.

சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!