நிலக்கோட்டை தாலுகா அளவில் பள்ளிகளிடையே காமராஜர் பிறந்த நாள் விழாபோட்டிகள் நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நீதியரசர் ஆறுமுகம்பரிசுகள் வழங்கினார்.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் பெருந்தலைவர் காமராஜர் நற்பணிஇயக்கம் சார்பாக நடந்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, மாறுவேடப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் 25 பள்ளிகளைச் சோ்ந்த 160 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்புவிழா நடந்தது. விழாவுக்கு நீதியரசர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.பெருந்தலைவர் காமராஜர் நற்பணி இயக்க தலைவர் மோகன் வரவேற்றார். மாவட்டபெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பொன்.அண்ணத்துரை, சமூக ஆர்வலர்கள் கோபால்,தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் ஏ.எம்.எஸ்.இளங்கோவன், முருகபாண்டி,வதிலை பிரபா, தயாளன், சுரேஷ், துரைப்பாண்டி, ராஜாங்கம் ஆகியோர் முன்னிலைவகித்தனா். சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ராஜா சிறப்புரை பேசினார். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு நீதியரசர் ஆறுமுகம் பரிசுகள் வழங்கினார்.அய்யன் திருவள்ளுவர் இலக்கிய பேரவை தலைவர் சூரியன் நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கினார். விழாவில் அரிமா சங்க வட்டார தலைவர் பி.டி.பால்ராஜ், பசுமைவதிலை இயக்க தலைவர் மருதராஜன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்படஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பாண்டியராஜன் நன்றி கூறினார்.
நிலக்கோட்டை தாலுகா அளவில் பள்ளிகளிடையே காமராஜர் பிறந்த நாள் விழா
எழுதியவர்: mohan July 18, 2019, 7:05 pm




You must be logged in to post a comment.