17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வெற்றி-TARATDAC கோரிக்கையை ஏற்று சாய்வுதள வசதி

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வெற்றி-TARATDAC கோரிக்கையை ஏற்று சாய்வுதள வசதி

எழுதியவர்: mohan July 18, 2019, 4:41 pm

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா வீரலப்பட்டி பிரிவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் இல்லாததால் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மிகவும் சிரமம் ஏற்படுவதால் உடனடியாக சாய்வுதளம் அமைக்க வலியுறுத்தி கடந்த 18.06.19 அன்று ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தின் பலனாக தற்பொழுது கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும், போராடினால் மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதாகவும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர் பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் முகாம் புதன்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது.வருகிற 22.07.19 முதல் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைகளில் மருத்துவ சான்றிதல் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.இந்த புதிய அறிவிப்பை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்பெற வேண்டுமாறு TARATDAC சார்பில் முக்கிய அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

செய்தியாளர்அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!