17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விளையாட்டு செய்திகள் » மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி

மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி

எழுதியவர்: mohan July 17, 2019, 1:51 pm

மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி: முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆயுதப் படையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருன் பாலகோபாலன் பாராட்டுகடந்த 13 மற்றும் 14 ஆம் தேதி கால் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 45 கபடி அணியினர் போட்டியில் பங்கு பெற்றனர்

இறுதியாக தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அணியினருக்கும் முப்பலி வெட்டி அணியினருக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அணியினர் முதலிடத்தை பிடித்து பரிசுத் தொகை ரூபாய்25 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையினை வென்றனர்முதலிடத்தில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் கௌரிசங்கர், சரத்குமார், கார்த்திக்,அர்ஜுன், விக்னேஷ், விஜய், குமார சங்கர், தம்பிக்கலை,ராஜபிரபு, ராமன், ராஜசேகர், மற்றும் புஷ்பராஜ் ஆகியோரை இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபால் பாராட்டி வாழ்த்தினார்அப்போது தூத்துக்குடி ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் மாரியப்பன், ஆயுதப் படை காவல் ஆய்வாளர் மகேஷ் பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!