18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.12.55 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.12.55 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

எழுதியவர்: mohan July 17, 2019, 11:48 am

வேலூர் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.நேற்று இரவு வேலூர் பென்ஸ் பார்க் ஓட்டல் அருகே பறக்கம் படை அதிகாரி மகிமை செல்வம் தலைமையில் வாகன தணிக்கை செய்தபோது ரூ.10 லட்சம் கைப்பற்றப்பட்டது. காரில் வந்த காட்பாடி காந்தி நகரை சேர்ந்த பிரவின் ராஜ் (22) தனியார் சிகரெட் கம்பனி டீலர் என்பதும் பணத்திற்கான கணக்கை அவர் காட்டவில்லை அதனால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வேலூர் தாசில்தார் ரமேஷிடம் ஒப்படைத்தனர்.

அதேப்போல் பேர்ணாம் பட்டில் வி.கோட்டாவை சேர்ந்த சுப்பிரமணியிடம் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 460 ருபாயும் இதே பகுதி பங்களா மேட்டில் பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியனிடம் (41) ரூ 64 ஆயிரத்தை பறிமுதல் செய்து பேர்ணாம்பட்டு தாசில்தார் செண்பகவள்ளி யிடம் ஒப்படைத்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!