பேரையூரை சேர்ந்தவர் மைதீன் இவருடைய மகள் ஜீனத்ராபியா (8) இவர் அங்குள்ள தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவி சாலையோரம் கேட்பாரற்று கிடந்த ரூ.2500/- ரூபாய் பணத்தை எடுத்து சென்று பள்ளி ஆசிரியரிடம் சாலையில் பணம் கிடந்த விவரத்தை கூறி உள்ளார்.உடனே ஆசிரியர் துணையுடன் மாணவி ராபியா பேரையூர் காவல் நிலைய SI மகேந்திரனிடம் பணத்தை ஒப்படைத்தனர். இதனை கண்ட பேரையூர் காவல் நிலைய போலீசார் மாணவியின் நேர்மையை கண்டு வெகுவாக பாராட்டினர்.
சாலையில் கண்டெடுத்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு.
எழுதியவர்: mohan July 16, 2019, 4:31 pm




You must be logged in to post a comment.