18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – ஒப்பந்த டிராக்டா்காரா்களால் வீணாகும் குடிநீா்.

மதுரை – ஒப்பந்த டிராக்டா்காரா்களால் வீணாகும் குடிநீா்.

எழுதியவர்: mohan July 16, 2019, 3:08 pm

மதுரை மாநகராட்சி சார்பாக லாரிகளில் மற்றும் டிராக்டர்களில் ஒப்பந்த அடிப்படையில் குடிநீர் சப்ளை செய்து வருகிறார்கள் இதில் பல லாரிகளில் மற்றும் டிராக்டர்களில் முறையான பராமரிப்பு இல்லாமல் குடிநீர் வரும் வழியிலேயே வீணாக சாலையில் செல்கிறது.

இதனால் பல நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் யாருக்கும் பயன் இல்லாமல் செல்கிறது. ஒப்பந்த அடிப்படையில் செல்லும் மாநகராட்சி குடிநீர் லாரி மற்றும் டிராக்டர்களை மாநகராட்சி அதிகாரிகள் உரிய வகையில் கண்காணித்து குடி நீர் வீணாகாமல் தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!