18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் மீனவர் நடுக்கடலில் உயிரிழப்பு..

மண்டபம் மீனவர் நடுக்கடலில் உயிரிழப்பு..

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 4:43 pm

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாரையூரணியைச் சேர்ந்தவர் பிரபாகரன், 35. மீன்பிடி தொழிலாளியான இவர், மண்டபம் தென் கடற்கரை பகுதியில் வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். மண்டபம் கோவில் வாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சதீஷ் என்பவரது விசைப்படகில் இன்று (15/07/2019) காலை தொழிலுக்குச் சென்றார். மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு பிரபாகரன் உயிரிழந்தார்.

சக மீனவர்கள் தகவல் படி, மண்டபம் மீன்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாட்டில், தனியார் ஆம்புலன்சில் பிரபாகரன் உடல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக மண்டபம் மெரைன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!