18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்க கோரி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்..

100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்க கோரி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 4:25 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர், நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, வெள்ளைமலைப்பட்டி, திம்மநத்தம், சீமானுத்து உள்ளிட்ட பகுதிகளிலில் உள்ள 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 100நாள் வேலைத்திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என நீண்ட நாளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த்தாகவும், பலமுறை மனு அளித்தும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இன்று (15/07/2019) உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவமறிந்து விரைந்து வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.

உசிலம்பட்டி செய்தியாளர்:- பா.சங்கர்நாத்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!