17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலையில் பிறந்த சில மணி நேரத்தில் அனாதையாக்கப்பட்ட பெண் குழந்தை..

திருவண்ணாமலையில் பிறந்த சில மணி நேரத்தில் அனாதையாக்கப்பட்ட பெண் குழந்தை..

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 4:05 pm

திருவண்ணாமலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக தபால் நிலைய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (15/06:2019) காலை ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டு பொதுமக்கள் சென்று பார்த்தனர், அங்கு பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இருந்தது.

பின்னர் இது குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவிக்கப்பட்ட்டு, பின்னர் குழந்தையை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறந்த சில மணி நேரத்திலே குழந்தையை வீசி சென்றது யார்? கள்ளக் காதலில் பிறந்ததா? அல்லது பெண் குழந்தை என வீசிச் சென்றனரா என திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தி:-  வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!