17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா…

ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா…

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 3:57 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் நா.கோமகன் தலைமை வகித்தார். காமராஜர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கவிதைப் போட்டியில் மாணவி பி.ஹரிதாஷினி, மாணவர் ம.ஜெயபிரகாஷ், மாணவி கி.முகிலா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. கிராமத் தலைவர் ரவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி சரஸ்வதி, கிராமக் கல்விக்குழு தலைவர் மலை ராஜன், பள்ளி மேலாண் குழு தலைவி சகுந்தலா, துணைத் தலைவர் வெங்கடேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் திருமேனி நாயகம் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!