17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என பிஜேபி தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றச்சாட்டு…

நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என பிஜேபி தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றச்சாட்டு…

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 1:30 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவில் எதிரில் பாரதிய ஜனதா தாமரை மலர்கள் இணைப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது, இந்நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹச், ராஜா தலைமையில் நடைபெற்றது,

இதில் மதுரை மாவட்ட தலைவர்கள், மருத்துவரனி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹச் ராஜா முன்னதாக அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து தாமரை மலர்இணைப்பு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இவர் நீட் தேர்வு மற்றும் பல்வேறு மக்கள் எதிர்க்கும் திட்டங்களை கொண்டு வந்தது திமுக எனவும், புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது மக்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது எனவும், சூர்யா பேசியதுமக்கள் அனைவரும் வன்முறையாக இருக்க வேண்டும் என கூறினார் எனவும் பேசினார், இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி செய்தியாளர், பா.சங்கர்நாத்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!