18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் அனுமதி …

ஆம்பூர் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்த பெண் மருத்துவமனையில் அனுமதி …

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 1:24 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் ரயில் பாதையில் சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட மைசூருக்கு சென்ற காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூரு கன்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்த நடராஜன் மற்றும் மனைவி உமாதேவி ஆகியோர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.

நள்ளிரவில் கழிவறைக்கு உமாதேவி செல்லும் போது தவறுதலாக ஏறி இறங்கும் கதவை திறந்து உள்ளார் திடீரென தடுமாறி வெளியில் விழுந்து உள்ளார். சுமார் 7 மணி நேரம் தனியாக முட்புதரில் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் இருந்து உள்ளார். காலையில் அப்பகுதியில் உளளவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!