18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மதுபான கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கீழக்கரையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மதுபான கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு…

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 12:17 pm

கீழக்கரையில் இருக்கும் இரண்டு மதுபான கடைகளும் பொதுமக்களுக்கு இடையூராக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுபான கடைகள் அருகில் நகரின் பிரதான பேரூந்து நிலையம், அரசு, தனியார் மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் இந்த மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு இந்த மதுபான கடைகளால் தொடந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது.

இந்த கடையில் மது அருந்தும் மது பிரியர்கள் போதை அதிகமாகி இந்த பிரதான சாலையில் கிடப்பதால் இந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் விபத்து ஆகும் நிலை ஏற்படுவதோடு, ஆடைகள் விலகி கிடப்பதால் இந்த பகுதியில் நடமாடும் பெண்கள், பள்ளி மாணவிகள் மனசஞ்சலத்தோடு இப்பாதையை கடந்து செல்கிறார்கள்.

எனவே, சமூகம் பொதுமக்கள் நலன் கருதி இந்த மதுபான கடைகளை இந்த இடத்தில் இருந்து அகற்றி ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைக்க தக்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டு இன்று (15/07/2019) மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாளில் இஸ்லாமிய கல்வி சங்கம், சட்ட விழிப்புணர்வு இயக்கம்,மஜ்ம-உல்-ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை நிர்வாகிகள் மனு அளித்தனர்.

இது சம்பந்தமாக இஸ்லாமிய கல்வி சங்கம் பொருளாலர் முகம்மது ஹமீது சல்மான் கூறுகையில் விரைவில் இந்த மதுக்கடைகளை அகற்ற கீழக்கரை அனைத்து தரப்பு மக்களை ஒருங்கிணைந்து ஜனநாயக வழி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

கீழக்கரையில் அசம்பாவிதங்கள் நடக்கும் பொழுது மதுக்கடை மற்றும் போதை பொருட்களை கட்டுப்படுத்த ஆர்ப்பாட்டங்களும், மனு அளிப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.  இது வெறும் சம்பிரதாயமாக இல்லாமல், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கீழக்கரையில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் முயற்சி செய்ய வேண்டும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!