17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதியில் திமுக., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா..

கமுதியில் திமுக., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா..

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 11:14 am

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தி மு க சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது காமராஜர் 117 வது பிறந்தநாளான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு கமுதியில் காமராஜர் சிலைக்கு இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ். பாண்டியன், கமுதி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வாசுதேவன், கமுதி பாலமுருகன், கமுதி நாடார் உறவின்முறையினர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கல்வி வளர்ச்சி நாள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!