17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழுதடைந்த மினி டேங்க் மோட்டார் சரிசெய்ய கோரி கிராம மக்கள் கோரிக்கை..

பழுதடைந்த மினி டேங்க் மோட்டார் சரிசெய்ய கோரி கிராம மக்கள் கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 10:04 am
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து பூகானஹள்ளி பஞ்சாயத்து பனங்கள்ளி கிராமத்தில் மூன்று வருடமாக பழுதடைந்து கிடக்கும் மினி டேங்க் மோட்டார் சரி செய்ய கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.
இங்கு 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கால காலமாக இயங்கி வந்த மினி டேங்க் மூன்று ஆண்டுக்கு முன்பு பழுதடைந்து உள்ளது. இந்த கிராமத்தில் இரண்டு கை பம்ப்,  மினி டேங்க் ஒன்று உள்ளது. கை பம்ப் பழுதடைந்த நிலையில் உள்ளது.
கிராம மக்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒகேனக்கல் குடிநீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் குடிநீருக்காக அங்குமிங்கும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கோ வேலைக்கு செல்ல முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். பனங்கள்ளி கிராம மக்களின் கோரிக்கை என்னவென்றால் அவர்கள் பழமையாக பயன்படுத்தி வந்த மினி டேங்க் மற்றும் அந்த கிராம மக்களுக்கு சரி செய்து கொடுத்தால் எங்களுக்குப் போதுமான குடிநீர் இதிலிருந்தே கிடைத்துவிடும் என்கின்றனர்.
இது சம்பந்தமாக பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் இடம் பலமுறை நேரில் சென்று கிராம மக்கள் தகவல் சொல்லியும் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு பழமை வாய்ந்த மினி டேங்க் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!