18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » அம்மையநாயக்கனூர் அருகே அடையாளம் தெரியாத இளம்பெண்ணை எரித்துக்கொலை ..

அம்மையநாயக்கனூர் அருகே அடையாளம் தெரியாத இளம்பெண்ணை எரித்துக்கொலை ..

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 9:56 am

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அம்மையநாயக்கனூர் அருகே நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியில் ஓரமாக கடந்த ஒரு வாரமாக குப்பைகள் போன்ற ஒரு மூட்டை கிடந்துள்ளது.  அம்மூட்டையை யாரோ ஒரு மர்ம நபர் தீ வைத்துள்ளார்.  அப்பொழுது அம்மூட்டைக்குள் இளம்பெண்  பிணம் என்று தெரியவந்துள்ளது.

இதைக்கண்ட அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் காவல்  காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து சோதனை செய்தனர். இதில் அந்த எரிந்த பெண்ணின் இரண்டு கால்களிலும் மூன்று இடங்களில் ரத்த காயத்தோடு வெட்டப்பட்டும்,  கழுத்தில் ஒரு கையிரும். எரிந்த நிலையில் ஒரு மோதிரமும் இருந்துள்ளது..

இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் கொடை ரோடு மெயின் சாலையில் ஒரு இளம் பெண்ணை எரித்து கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!