18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அம்மையநாயக்கனூர் அருகே நடுத்தெருவில் ஓடும் சாக்கடை தொற்றுநோய் பரவும் அபாயம்..

அம்மையநாயக்கனூர் அருகே நடுத்தெருவில் ஓடும் சாக்கடை தொற்றுநோய் பரவும் அபாயம்..

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 9:51 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 8வது வார்டு எட்டு நாய்க்கர் காலனியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகிறது.. இங்கு வாழும் மக்கள் அனைவரும் கூலி வேலை செய்து அன்றாட பிழைப்பை நடத்தி வருகிறார்கள். கிராமத்தை பொறுத்தவரை அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் இருந்துதான் தண்ணீர் மற்றும் அடிப்படைத் தேவைகள் செய்யப்பட்டு வருகிறது. அடிப்படைத் தேவைகளில் ஒன்றும் முறையாக இந்த கிராமத்தில் ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக  காரணமாக சாக்கடை நடுரோட்டில் செல்கிறது.

இப்படி நடு ரோட்டில் செல்வதால் அவசர காலங்களில் வாகனங்களில் செல்பவர்கள் மீது சாக்கடை நீர் தெளித்து மனிதர்களின் உடலில் சாக்கடை படுவதால் தொற்றுநோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து பல ஆண்டுகளாக பேரூராட்சி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு கிராமமக்கள் மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இக்கிராமத்தை நேரில் ஆய்வு செய்து சாக்கடையை நடுத்தெருவில் விடுவதை முறைப்படுத்தி சாக்கடை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!