18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்…

மதுரையில் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் July 14, 2019, 11:51 pm

இன்று (14.07.2019) காவல்துறை தலைமை இயக்குநர் திரு.திரிபாதி IPS,  தென்மண்டல காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு காவல்துறை சிறந்தமுறையில் சேவை செய்ய வேண்டும் எனவும் காவல்துறை மீது பொதுமக்களுக்கு முழு நம்பிக்கை வரும்படி பணி செய்ய வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

இக்கூட்டத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS, தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.சண்முக ராஜேஷ்வரன் IPS, தென்மண்டல காவல் சரகங்களின் துணைத்தலைவர்கள், மதுரை மாநகர காவல்துறை துணைஆணையர்கள் மற்றும் தென்மண்டல காவல்துறை கண்காணிப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மேலும் காவலர்கள் பணிபுரியும்போது மனஅழுத்தமின்றி புத்துணர்வுடன் செயல்பட ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் WELL BEING- வகுப்புகள் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் கலந்து கொண்டு காவலர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் காவலர்கள் மனஅழுத்தமின்றி புத்துணர்வுடன் இருந்தால் தான் பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் 115 காவலர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!