18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தீ மிதித் திருவிழாவில் தீக்குண்டத்தில் இறங்கிய பூசாரி தவறி விழுந்து படுகாயம்..

மதுரையில் தீ மிதித் திருவிழாவில் தீக்குண்டத்தில் இறங்கிய பூசாரி தவறி விழுந்து படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் July 14, 2019, 5:22 pm

மதுரை அண்ணா நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 41-ம் ஆண்டு உற்சவ விழா கடந்த  5-ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 12-ம் தேதி காலை பால்குடம், வேல் மற்று 40 அடி அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். மேலும் மாலை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம், அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் அக்னி குண்டம் இறங்குதல் நடை பெற்றது. இதில் கோவில் பூசாரியான மகாலிங்கம் கரகத்துடன் அக்னி குண்டத்தில் இறங்கிய போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்வத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!