17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் வீரகுல தமிழர் படை அமைப்பின் சார்பில் நடைபெற்ற டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்…

கீழக்கரையில் வீரகுல தமிழர் படை அமைப்பின் சார்பில் நடைபெற்ற டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் July 14, 2019, 4:29 pm

கீழக்கரையில் விதிமுறைக்கு புறம்பாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் நடைபெற்று வரும்  கீழக்கரை பேரூந்துநிலையம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி இன்று (14-7-2019) காலை 11 மணியளவில் வீரகுல தமிழர் படை அமைப்பின் சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்  வீரகுல தமிழர் படை இயக்கம் கீழை பிரபாகரன் தலைமை வகித்தார்.  மேலும் பாவெல், மாநில ஒருங்கிணைப்பாளர் இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் இயக்கம், நாகேஸ்வரன் – நிறுவன தலைவர், பெரியார் பேரவை, பசுமலை ( வழக்கறிஞர் ) தமிழர் தேசிய முன்னணி, மாநில துணை பொதுச்செயலாளர் மற்றும் ஏராளமான பொது நல விரும்பிகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!