17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாடாளுமன்ற தேர்தல் அன்று ஒளிர்வதை நிறுத்திக்கொண்ட உயர்கோபுர மின்விளக்கு

நாடாளுமன்ற தேர்தல் அன்று ஒளிர்வதை நிறுத்திக்கொண்ட உயர்கோபுர மின்விளக்கு

எழுதியவர்: mohan July 13, 2019, 4:48 pm

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் குன்னம் பேருந்து நிலையம் அருகே உயர்கோபுர மின்விளக்கு சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி அவர்களின் நிதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் அன்று முதல் உயர் கோபுர மின் விளக்கு ஒளிரவில்லை.குன்னம் பேருந்து நிலையம் ஆயிரக்கணக்கான மக்கள் சந்திக்கும் ஒரு மையப் பகுதியாக திகழ்கிறது.மேலும் இருள் சூழ்ந்த நிலையில் பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது.குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இந்த விளக்கு அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில்தான் உள்ளது.

எம்எல்ஏ அலுவலகம் அருகே உள்ள விளக்கு ஒளிரவில்லை என்றால் பாமர மக்கள் வசிக்கும் கிராமங்களின் நிலை என்னவாகும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் இந்த மின் விளக்கை ஒளிர வைக்க தேவையான நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என மக்கள்பாதை அமைப்பின் சார்பில் சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார் .

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!