18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே குடிநீர் இல்லாமல் பள்ளி மாணவர்கள் மயக்கம் பெற்றோர் பள்ளி முன்பு முற்றுகை போராட்டம்

நிலக்கோட்டை அருகே குடிநீர் இல்லாமல் பள்ளி மாணவர்கள் மயக்கம் பெற்றோர் பள்ளி முன்பு முற்றுகை போராட்டம்

எழுதியவர்: mohan July 12, 2019, 6:54 pm

மூன்று மாதங்களாக தண்ணீர் இன்றி தவிக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக் குழந்தைகள் இதனால் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குல்லலகுண்டு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றியத்தின் நிதி உதவி பெறும் தனியார் துவக்கப் பள்ளி உள்ளது இந்தப் பள்ளியில் சுமார் 150- குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் கடந்த மூன்று மாதங்களாக மிகவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது மேலும் கடந்த ஒரு மாதமாக இந்த தண்ணீர் பஞ்சமானது தீவிரமடைந்து மாணவ குழந்தைகளின் அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது இந்த பள்ளியில் குழந்தைகள் ஆசிரியர்கள் குடிப்பதற்கு மட்டும் அல்லாமல் கைகழுவக்கூட கழிவறைக்கு கூட தண்ணீர் இல்லாததா நிலை ஏற்பட்டது.

இதனால் இப்பகுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிக்கு தண்ணீர் தேவை என ஊராட்சி செயலாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவர் தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் நேரடியாக மனு மூலம் தெரிய படுத்தியும் கண்டுகொள்ளவில்லை என கூறி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.இந்நிலையில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வரும் பெற்றோர்கள் இன்று 70-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளியின் முன் கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அரசு நிர்வாகம் இந்த பள்ளிக்கு தண்ணீர் வழங்க மறுத்து வருவதால் தங்கள் குழந்தைகளை அரை நாளில் தினமும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இதனை கவனித்து உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் வழங்காவிடில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என கூறியுள்ளனர்….

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!