17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒகேனக்கல் குடிநீர் கடந்த 3 மாதமாக வராததால் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்..

ஒகேனக்கல் குடிநீர் கடந்த 3 மாதமாக வராததால் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்..

எழுதியவர்: ஆசிரியர் July 12, 2019, 12:50 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த போவரஹள்ளி பஞ்சாயத்து எருமப்பட்டி கிராமத்தில் கடந்த 3 மாதமாக ஒகேனக்கல் குடிநீர் வராததால் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் எருமப்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது

கடந்த 3 மாதமாக ஒகேனக்கல் குடிநீர் வராத நிலையில் பக்கத்து உள்ள கிராமங்களில் சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  ஆப்ரேட்டரிடம் குடிநீர் ஏன் வரவில்லை என்று மக்கள் கேட்டால் இந்த வாரம்,  நாளைக்கு ஒரு நாள், மறுநாள் என்ற காலத்தை கடத்தும் பதிலே மூன்று மாதமாக வருகிறது.

இதனால் பள்ளிக் குழந்தைகள், வேலைக்குப் போகும் மக்கள் மூன்று மாதமாக வெளியில் பக்கத்து கிராமத்தில் சென்று தான் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி செல்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த எருமை பட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!