18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மதுபானக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

எழுதியவர்: mohan July 12, 2019, 11:12 am

திருநெல்வேலியில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோவிலில் ஆனித்தேரோட்டம் 14.07.2019-அன்று நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் மதுபான விற்பனை கடைகளான (டாஸ்மாக்குகள்) நெல்லை யப்பர் கோவிலைச் சுற்றியுள்ள பின்வரும் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் நடத்திவரும் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஆகியவைகள் 14.07.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மூடப்பட்டிருக்கும்.மேலும் மேற்படி நாளில் திருக்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக எவ்விடத்திலும் மதுபானங்கள் விற்பனை மற்றும் மதுபானங்கள் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!