17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை மாவட்டத்தில் யானைகள் அட்டகாசம்-அச்சத்தில் விவசாயிகள்

நெல்லை மாவட்டத்தில் யானைகள் அட்டகாசம்-அச்சத்தில் விவசாயிகள்

எழுதியவர்: mohan July 12, 2019, 11:01 am

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான கருப்பாநதி நீர்த்தேக்க பகுதியில் சொக்கம்பட்டியின் மேற்கு பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் வாழை, தென்னை உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பயிர்களை பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் 10.07.19 காலை இப்பகுதி விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகள்,தென்னைகளைசேதப்படுத்தின.மேலும் இப்பகுதியிலுள்ள கிணற்றில் தண்ணீர் குழாய்களையும், மலைவாழ் மக்கள் வசிக்கின்ற பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான வடகரை, மேக்கரை, காசிதர்மம், சின்னக்காடு பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!