லாகூர்: பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எதிர்திசையில் வந்த பயணிகள் ரெயில் தவறான டிராக்கில் சென்று மோதியது.இதில் பயணிகள் ரெயிலின் என்ஜின் பகுதியும் 3 பெட்டிகளும் அப்பளம் போல் நொறுங்கின. இந்த விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உள்பட 11 பயணிகள் பலியாகினர் எனவும், 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர் எனவும் போலீசார் முதல் கட்டமாக தெரிவித்தனர்.இந்நிலையில், மருத்துவமனைகளில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் சிகிச்சை பலனின்ரி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் ரயில் விபத்து 20 பேர் பலி
எழுதியவர்: mohan July 12, 2019, 9:49 am




You must be logged in to post a comment.