17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது..

திண்டுக்கல்லில் கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் July 12, 2019, 3:37 am

திண்டுக்கல்  மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரபிக் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செட்டிநாயக்கன்பட்டி அருகே திருச்சி பைபாஸ் ரோட்டில் வந்த மாருதி காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. ஆதலால் காரில் இருந்த மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இதுகுறித்து தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் தெய்வம் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார்(43) ரேவதி(33) சூரிய பிரகாஷ், என தெரிய வந்தது, ஆகவே 3 பேரையும் பிரிவு 8(c) r/w 20(b) (2) (B) NDPS Actன் படி கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 24 கிலோ கஞ்சா மற்றும் மாருதி காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!