17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் அப்துல் கலாம் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது..

இராமேஸ்வரம் அப்துல் கலாம் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது..

எழுதியவர்: ஆசிரியர் July 11, 2019, 5:40 pm

இராமேஸ்வரம் அப்துல்கலாம் கல்லூரிக்கான சேர்க்கை விண்ணப்பத்தை இராமநாதபுரம் சேதுபதி அரசுக்கல்லூரி முதல்வர் மகுதம்மாள் விண்ணப்ப படிவம் வழங்கி மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இராமேஸ்வரம் பாரத ரத்னா ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் நாகராஜன், இராமநாதபுரம் அரசு கல்லூரி பேராசிரியர் ராமகிருஷ்ணன், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சந்தானவேலு, நுகர்வோர் பாதுகாப்பு இயக்க செயலாளர் களஞ்சியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியர் என 15 மாணவருக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது.

அரசு வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்பம் விநியோகம், மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!