17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே சோளக்கதிர்போதிய விலையில்லாததால் அறுவடை செய்யாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை.

உசிலம்பட்டி அருகே சோளக்கதிர்போதிய விலையில்லாததால் அறுவடை செய்யாமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை.

எழுதியவர்: mohan July 11, 2019, 5:18 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சந்தைப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சோளம் அதிகம் பயிரிட்டுள்ளனர். இந்த சோளம் அதிக விலை போகும் என்ற நோக்கில் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டுள்ளனர். ஆனால்

இந்த வருடம் பருவ மழைகள் பெய்யாததால்; தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சி பாதுகாத்து வரும் நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள இந்த சோளக்கதிர்களுக்கு போதிய விலையில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால் சென்ற வருடம் சோளம் 1 குவின்டால் ரூ5000 வரை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த 1 குவின்டால் ரூ2000 வரை தான் விற்பனை செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் சோளக்கதிர்களை அறுவடை செய்யாமல போதிய விலைக்காக காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உசிலம்பட்டி செய்தியாளர் சங்கர்நாத் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!