17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்களை கண்டு கொள்ளாத திருமங்கலம் பகுதி அரசு பேருந்து…

மக்களை கண்டு கொள்ளாத திருமங்கலம் பகுதி அரசு பேருந்து…

எழுதியவர்: ஆசிரியர் July 11, 2019, 2:21 pm

மதுரை திருநகர் முதலாவது பேருந்து நிறுத்தம் பாண்டியன் நகரில் அனைத்து பேருந்துகளும் நிறுத்த  வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர் உத்தரவு உள்ளது . ஆனால் இதனை மதிக்காமல் பல நேரங்களில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் பயணிகளே இல்லை என்றாலும் கூட பயணிகள் கையை காட்டினாலும்,  வாகனத்தை நிறுத்தாமல் செல்வது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் இன்று (11/07/2019) வாகன எண்TN58N2331 கொண்ட அரசு பேருந்து பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தத்தில் சில பயணிகள் கையை காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் அலட்சியமாக சென்றுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் கடுமையாக கண்டித்ததுடன் அரசு பேருந்து நிர்வாகம் மீது அதிருப்தியை தெரிவித்தனர். இது சம்பந்தமாக உத்தரவை மீறும் ஓட்டுநர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்களும்,  பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!