18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அவசர நிலையில் அமைக்கப்பட்ட புதிய தார்சாலையால் வாகன ஓட்டிகள் அவதி ..

அவசர நிலையில் அமைக்கப்பட்ட புதிய தார்சாலையால் வாகன ஓட்டிகள் அவதி ..

எழுதியவர்: ஆசிரியர் July 11, 2019, 10:57 am

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி இருந்து தர்மபுரி செல்லும் பழைய தார் சாலை மீது புதிய தார் ஊற்றும் பணி தொடங்கப்பட்டது பாப்பாரப்பட்டி இருந்து  15 கிலோமீட்டர் தொலைவில் தர்மபுரி உள்ளது. சில மாதத்திற்கு முன்பு அவசர அவசரமாக பாப்பாரப்பட்டி இருந்து தருமபுரி செல்லும் சாலையில் பழைய தார் சாலை மீது புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

இதனால் புதிய தார்சாலை  பக்கவாட்டில் நிலத்துக்கு மேலே உயரமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி பட்டு வருகின்றன இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பேருந்துக்கு இருசக்கர வாகனம் சைடு வாங்கும் போது விபத்து ஏற்படுகிறது.

அதே பகுதியில் மூன்று அரசு மதுக்கடைகள் உள்ளதால் மது வாங்க வரும் மது பிரியர்கள் இருசக்கர வாகனத்தை தார்சாலை மீதி நிறுத்திவிட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது தார் சாலையில் இருந்து கீழே மண் பாதைக்கு இருக்கும் போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இதனால் பொதுமக்களின் நலன் கருதி புதிய தார்சாலை அமைக்க பட்ட பக்கவாட்டு நிலத்திற்கு மேலே உயரமாக இருக்கும் தார் சாலை அளவுக்கு இருபக்கமும் ஓரங்களில் மண் கொட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!