18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரத்தில் அரசு கல்லூரி துவக்கக் கோரி தாசில்தாரிடம் மனு

ராமேஸ்வரத்தில் அரசு கல்லூரி துவக்கக் கோரி தாசில்தாரிடம் மனு

எழுதியவர்: mohan July 9, 2019, 4:45 pm

இராமேஸ்வரம் பகுதியில் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவ, மாணவியர் ராமநாதபுரம், மதுரை, திருச்சி நகரங்களில் தங்களின் கல்லூரி கல்வியை முடிக்கின்றனர். இத்தகைய சிரமம் போக்க ராமேஸ்வரத்தில் கல்லூரி ஏற்படுத்த வேண்டும் பொது மக்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் அரசு கலை கல்லூரி அமையும் என தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2019 பிப்., யில் சமர்பித்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டார்.

ஆனால், 2019-20 கல்வி ஆண்டில் கல்லூரிகள் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும் ராமேஸ்வரத்தில் அரசு கல்லூரி அமைவதற்கான எவ்வித சாத்தியக்கூறு இல்லை. தமிழக அரசு அறிவித்தபடி, நடப்பு கல்வி ஆண்டிலேயே ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் அரசு கல்லூரி தொடங்கக்கோரி ராமேஸ்வரம் தீவு மக்கள் நல பேரவையினர் தாசில்தார் ஜாபரிடம் மனு அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!