தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி ஊராட்சியில் சமத்துவபுரம், வீஸ்டேரிப்பள்ளத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக குடிநீர் தட்டுபாட்டால் பொதுமக்கள் 1கி.மீ தூரத்திற்க்கு சென்று குடிநீர் கொண்டு வரும் சிரமம் குறித்து அமைச்சருக்கு மனு அளிக்கப்பட்டது.
இதையாடுத்து மாவட்ட நிர்வாகம் குடிநீர் தட்டுபாட்டை போக்க கடந்தாண்டு சமத்துவபுரம், வீஸ்டேரிப்பள்ளத்திற்கும் குடிநீர் வழங்க உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஒரு ஆழ்துளை கிணறு மற்றும் உயர்மட்ட நீர்தேக்க தொட்டியும் அமைக்க அடிக்கல் நாட்டினார். இதையாடுத்து ஆழ்துளைகிணறு, குடிநீர்குழாய் அமைக்கப்பட்டது. பணியில் தொய்வு காரணமாக ஒரு வருடத்தை கடந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் குடிநீர் வற்றியதால் ஒப்பந்ததாரர் பணியை பாதியிலே நிறுத்திவிட்டார்.
இதனால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தங்கள் அடிப்படை தேவைக்கும், ஆடு, மாடுகளுக்கும், குடிநீர் தேவைக்காக 1கி.மீ தூரம் சென்று குடிநீர் கொண்டு வரும் அவலநிலையில் உள்ளனர். மேலும் ஒரு டிராக்டர் தண்ணீர் 700ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரெட்டியூரிலிருந்து ஒகேனக்கல் குடிநீர் குழாய் அமைத்து சமத்துவபுரம் மற்றும் விஸ்டேரிப்பள்ளத்திற்க்கு குடிநீர் வழங்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:- சிங்கார வேலு




You must be logged in to post a comment.