17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan July 9, 2019, 9:05 am

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் செயலாளர்களின் பணியிட மாற்றம் அரசாணையை பரிசீலனை செய்ய கோரியும், தமிழக அரசை வலியுறுத்தியும்,மதுரை மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் (SAT/383) சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் மதுரையில் நடைபெற்றது.தமிழ்நாடு முழுவதும் உள்ள 4500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணி புரிந்து வரும் செயலாளர்களை தமிழக அரசு பொது பணி நிலைத்திறன்  அடிப்படையில் மாவட்ட அளவில் பணியிட மாற்றம் செய்யும் வகையில் வழங்கிய அரசாணையை பரிசீலனை செய்ய கோரி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி இறுதியில் தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு வழங்க முடிவு செய்யப்பட்டதின் ஒரு பகுதியாக மதுரை லேடி டோக் கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கியின் மதுரை  மண்டல இணை இயக்குனர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், மாவட்ட செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் அவர்கள் முன்னிலையிலும்  மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் கணேசன், துணைத் தலைவர்கள் பாரூக் அலி, செல்வம், இணைச் செயலாளர்கள் சுமதி, நீதி முத்தையா , மற்றும் சங்க உறுப்பினர்கள் 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பின்னர் மாவட்ட செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் 20 வருடத்திற்க்கும் மேலாக பணி உயர்வு பெறாமல் ஒரே பதவில் பணிபுரிந்து வருகின்றனர். பொதுப்பணி நிலை அமல்படுத்தினால் இவர்களுக்கான பதவி உயர்வு முற்றிலும் பாதிக்கப்படும்.வணிக வங்கிகளின் தாக்கத்தாலும் செயலாளர்கள் பணியிட மாறுதல் நடவடிக்கையாலும், தொடக்க கூட்டுறவு சங்கங்களை மேலும் நலிவடைய செய்வதோடு பணியாளர்கள் ஊதியம் பெற முடியாத நிலை ஏற்பட்டு ஊழலுக்கு வழிவகை செய்து விடும்.பொது வினியோக திட்ட பணியாளர்களுக்கு அரசு தெரிவித்ததற்க்கு இணங்க ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்.இவ்வாறு மாவட்ட செயலாளர் ஆசிரியதேவன் கூறினார்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!