17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை – பழமை அருங்காட்சியக மரபு குறித்து கருத்தரங்கம்

நெல்லை – பழமை அருங்காட்சியக மரபு குறித்து கருத்தரங்கம்

எழுதியவர்: mohan July 8, 2019, 6:33 pm

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் 08.07.19 இன்று காலை அக்கல்லூரியின் தமிழ்த் துறையும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இணைந்து பழமை அருங்காட்சியக மரபு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் தலைமை தாங்கினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.மாரியம்மாள் வரவேற்புரை வழங்கினார்.

அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி அரிய பொருள் பாதுகாப்பு எனும் தலைப்பில் சிறப்பு ஆற்றினார்.மேலும் அவர் பேசுகையில்”ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான நம் தமிழ்ப் பண்பாடுகளைக் காத்திடவேண்டும்.தஞ்சை பெரிய கோவில், கிருஷ்ணாபுரம் கோவில் கலைச் சிற்பங்கள் எல்லாம் நம் மூதாதையர்களின் அரிய கலைகள் … அவைகளை பாதுகாத்திட வேண்டியது இளந்தலைமுறையினரின் கடமை”எனப் பேசினார்.

தொடர்ந்து கடந்த ஜுன் மாதத்தில் நெல்லையில் நடந்த பாரதிப் படைப்புகளின் பன்முகப் பார்வை என்ற பன்னாட்டு கருத்தரங்கிற்கு கட்டுரைகள் எழுதிய கல்லூரி முதல்வர் முனைவர் வேலம்மாள் உட்பட பேராசிரியர்கள் மாணவ மாணவியர்களுக்கு ஆய்வுக்கோவை மற்றும் சான்றிதழ்களை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பே.இராஜேந்திரன் வழங்கினார். பரணி இலக்கிய முற்றம் கி.சந்திரபாபு பாரதி பாடல் பாடினார்.கவிஞர் சுப்பையா விழிப்புணர்வு பாடல் பாடினார்.நிறைவாக கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வெ.செல்லத்தாய் நன்றி கூறினார்.கவிஞர்கள், எழுத்தாளர்கள்,மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!