தூத்துக்குடி மாநகராட்சியின் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி மாநகர் தெற்கு மண்டல பாஜக சார்பில் முத்தையாபுரம் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு தெற்கு மண்டல தலைவர் சின்னதங்கம் தலைமை வகித்தார் தூத்துக்குடி சட்டமன்ற பொறுப்பாளர் பிரபு மற்றும் கிஷோர்குமார் முன்னிலை வகித்தனர்.
மாவட்டதலைவர் பாலாஜி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சந்தானகுமார், மாவட்டபொதுச் செயலாலர் சிவராமன், பிரச்சாரபிரிவு மாவட்டசெயலாளர் தமிழன்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு மாநகராட்சியின் சொத்து வரி உயர்வை எதிர்த்து கோஷமிட்டனர்




You must be logged in to post a comment.