உசிலம்பட்டியில் கல்வி கட்டணத்தை காரணம் காட்டி தனியார் பள்ளி நிர்வாகம்; தனது 3 குழந்தைகளை பள்ளியில் அனுமதிக்காதததை கண்டித்து பாண்டி என்பவர் உசிலம்பட்டி கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்தை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி(38). இவருடைய மூன்று குழந்தைகள் திலோசான் (6), திகோ (13) திவானி (10) இந்த குழந்தைகள் உசிலம்பட்டி கவன்டன்பட்டி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ( எஸ்டிஏ மெட்ரிக் மேல்நிலைபபள்ளி ) படித்து வருகின்றன. ஆதிதிராவிடரான பாண்டியின் குழந்தைகளுக்கு கடந்த வருடம் வரை பள்ளி முதல்வராக இருந்தவர் பள்ள்pக் கட்டணத்தில் சலுகை வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த வருடம் புதிதாக வந்த பள்ளி முதல்வர் முழுக்கட்டணத்தையும் கட்ட பாண்டியை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் கடந்த காலகட்டங்களில் கல்வி கட்டண பாக்கித் தொகை ரூ 1லட்சம் உள்ளதாகவும், இதனை முழுவதுமாக செலுத்தினால் தான் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியும் என பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்த பாண்டி மதுரை மாவட்ட ஆட்சியர், உசிலம்பட்டி கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தார். இது தொடர்பாக உசிலம்பட்டி கோட்டாட்சியர் பாணுகோபன், வட்டாட்சியர் செந்தாமரை, காவல் துறை துணை கண்கானிப்பாளர் ராஜா, தலைமையில் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பாண்டி தரப்பினரை அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது பள்ளி நிர்வாகம் இந்த குழந்தைகளை சேர்க்க மறுப்பதால் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உசிலம்பட்டி செய்தியாளர் சங்கர்







You must be logged in to post a comment.