17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாயமான இரண்டு மீனவரை தேடும் பணி தீவிரம்.ஆட்சியா் தகவல்.

மாயமான இரண்டு மீனவரை தேடும் பணி தீவிரம்.ஆட்சியா் தகவல்.

எழுதியவர்: mohan July 8, 2019, 4:14 pm

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில்பைபர் படகு மூலம் 04/7/2019 ஆம் தேதி காலை அந்தோணி, மியோன், வின்தாஸ் , ஸ்டீபன் ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்தபோது காற்றின் வேகத்தால் 4 மீனவரும் மாயமாகினர். மீனவர்களைதேடி வந்த நிலையில் ஸ்டீபன், அந்தோணி ஆகியோர் ஜெகதாப்பட்டிணத்திற்கு வந்து சேர்ந்தனர். மாயமான இரண்டு மீனவரை தேடி வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மீனவர்களின் குடும்பத்தினரை ஆட்சியர் வீரராகவ ராவ் ஆறுதல் கூறினார். மாயமான 2 மீனவரை கப்பல், 2 விமானம் மூலம் தேடி வருவதாக தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!