17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவேரிப்பாக்கம் அருகே சாலை விபத்து 4 பேர் பலி

காவேரிப்பாக்கம் அருகே சாலை விபத்து 4 பேர் பலி

எழுதியவர்: mohan July 8, 2019, 9:44 am

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த செட்டித்தங்கள் பகுதியை சேர்ந்தவர் இளம்பருதி இவர் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறார்காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசனம் செய்ய அவரது மனைவி சரஸ்வதி மற்றும் மகன் தனுஷ் ஆகியோருடன் காஞ்சிபுரம் சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே காளிமுத்து என்பவர் சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக இளம்பரிதி சரஸ்வதி தனுஷ் வந்த இருசக்கர வாகனம் காளிமுத்து மீது மோதி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது மோதிய விபத்துக்குள்ளானது இதில் பலத்த காயமடைந்த நால்வரும் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் கொண்டு செல்லும் வழியிலேயே இளம்பருதி தனுஷ் ஆகியோர் இறந்துவிட்டனர் மேலும் சரஸ்வதி காளிமுத்து ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!