17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை -செக்கானூரணியில் கட்டடம் இடிந்து விபத்து ஒருவர் பலி.

மதுரை -செக்கானூரணியில் கட்டடம் இடிந்து விபத்து ஒருவர் பலி.

எழுதியவர்: mohan July 6, 2019, 5:02 pm

மதுரை செக்கானூரணியில் கட்டடம் இடிந்து விபத்து ஒருவர் பலியானார்.3 பேர் படுகாயமடைந்தனர்

மதுரை மாவட்டம் அருகில் உள்ள செக்கானூரணியில் மாதவன் என்பவர் வீடு கட்டி வருகிறார்.கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென கட்டடம் இடிந்து சரிந்தது.யாரும் எதிர்பாராத நிலையில் விழுந்தது. கட்டட இடிபாட்டில் 7 தொழிலாளர்கள் சிக்கினார்கள்.விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜசேகர், எஸ்.பி. மணிவண்ணன், தென்மண்டல ஐ.ஜி ஆனி விஜயா ஆகியோர் நேரில் வந்து மீட்புப் பணியிணை பார்வையிட்டனர். முருகன், ராஜேஸ், கார்த்திக், காசிநாதன் ஆகிய 4 கட்டிட தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காசிநாதன் என்பவர் சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் பலியானார்.ஒரு தளத்துக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில் விதிகளை மீறி 3 மாடிகளைக் கட்டியதாக வீட்டின் உரிமையாளர் மாதவன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.கட்டிடம் இடிந்த விபத்தில்அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 3 பேரை பார்வையிட்டனர். இதுகுறித்து மருத்துவமனை டீன் வனிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் கார்த்திக் என்ற தொழிலாளி மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதால் அவரின் நிலைமை மோசமாக உள்ளது. மற்ற இருவரும் நலமாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.

 மதுரை நிருபர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!